February 12, 2018
தண்டோரா குழு
பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகோடா விற்ற புதுவை முதல்வருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் அல்வா கடை திறந்து விற்பனை செய்து போராட்டம் நடத்தினர்.
இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலை வாய்ப்புதானே என பாஜக தலைவர் அமித்ஷா கூறினார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் மோடி அரசின் ஏமாற்று வேலை எனக் கூறியும் பிரதமர் மோடியைக் கண்டித்து, புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் கடந்த வாரம் பக்கோடா விற்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, இளைஞர் காங்கிரஸார் பட்டம் பெற்ற உடையணிந்து, அடுப்பு மூட்டி பக்கோடா, பஜ்ஜி ஆகியவற்றை சுட்டு மோடி பக்கோடா, பஜ்ஜி எனக் கூவிக் கூவி விற்பனை செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராமலும் பல்வேறு வரி உயர்தப்பட்டுள்ளதையும் கண்டித்து பாஜக சார்பில் நேரு சாலையில் நாராயணசாமி என்ற பெயரில் அல்வா கடை திறந்து பாஜகவினர் விற்பனை செய்து வருகின்றனர். இதில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.