• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோ பார்கிங் பலகை முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை சங்கிலியால் பூட்டு போட்ட மாவட்ட நிர்வாகம்

August 9, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோ பார்கிங் பலகை முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை மாவட்ட நிர்வாகம்
சங்கிலியால் பூட்டு போட்டது.

தமிழகத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வண்டியை நிறுத்தினால் இது வரை கொடுத்து வந்த தொகையைவிட மிக அதிகமான தொகையை அபராதமாக கட்ட வேண்டும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது சொந்த பணிகளுக்காக வரும் மக்கள் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு அலுவலக வாகனங்களுக்கு இடையூராகவும் இருந்து வந்துள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் குறிப்பிட்ட இடங்களில் நோ பார்க்கிங் பலகை மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளது.

இதனைடையே மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று மக்களின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதனால் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் அதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனங்களுக்கு சங்கிலியால் பூட்டு போடப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க