• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோ பார்கிங் பகுதியில் நிறுத்தபட்ட வாகனத்திற்கு பூட்டு போட சொன்ன மாவட்ட ஆட்சியர்.

October 11, 2019

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோ பார்கிங் பகுதியில் நிறுத்தபட்ட வாகனத்திற்கு மாவட்ட ஆட்சியர் பூட்டு போட உத்திரவிட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று.இக்கூட்டதிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வரும் அதிகாரிகள் அலுவலக வாயில் முன்பும் அதற்கு பின்னால் உள்ள இடத்தில் நிறுத்துவார்கள்.இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கபட்டு இருந்தும் இங்கு வருபவர்கள் ஆங்காங்கே கண்ட இடத்தில் வண்டியை நிறுத்தி சென்று விடுகின்றனர்.இன்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அலுவகதிற்கு வந்த ஆட்சியர் இடையூறாக வாகனங்கள் நிறுத்தபட்டு இருப்பதை கண்ட அவர் அந்த வாகனங்களுக்கு பூட்டு போட போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தபட்ட வாகனங்களுக்கு செயின் கொண்டு பூட்டு போட்டதுடன் அபராதமும் விதித்தனர்.அந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களின் வாகனம் என்பது விசாரனையில் தெரிய வந்தது.மேலும் அபராதம் விதிக்கபட்டவர்கள் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால் அவரை சந்தித்த பிறகே வாகனங்களில் போடபட்ட பூட்டு அகற்ற படும் என காவல்துறையினர் தெரிவித்தை தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து தங்களது தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க