• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோய் தொற்று காலங்களில் வீடுகளை சுத்தமாக வைத்துகொள்ள நவீன வகை டர்போ கோவையில் அறிமுகம் !

August 28, 2021 தண்டோரா குழு

நோய் தொற்று காலங்களில் வீடுகளை சுத்தமாக வைத்துகொள்ள ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள நவீன வகை டர்போ ஸ்பின் மாப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்,முக கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் புதிதாக நோய் தொற்றுகள் பரவாமல் இருக்க வீடுகளையும் சுத்தமாக வைப்பது அத்தியவாசியமாக உள்ளது.

இந்நிலையில் வீடுகளை எளிதாக சுத்தம் செய்ய நவீன வகையிலான காலா டர்போ ஸ்பின் மாப் கோவையில் அதன் விற்பனையை துவக்கி உள்ளது.ஃப்ரூடன் பெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான இதன் விற்பனை,கோவையில் முதன் முறையாக திருச்சி சாலையில் உள்ள டென்னிஸ் ஹைபர் மார்க்கெட்டில் துவங்கியது.இதற்கான துவக்க நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் நரேஷ் பண்டாரி ,டென்னிஸ் ஹைபர் மார்க்கெட்டின் மேலாளர் ஜோபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாராகி உள்ள காலா டர்போ ஸ்பின் மாப் குறித்து,ஏரியா மேலாளர் ஜெப்ரே ஜோஸ்வா கூறுகையில்,

99 சதவீத கிருமிகளை அழிக்கும் திறன் இந்த காலா ஸ்பின் மாப் இருப்பதாக கூறிய அவர்,குறிப்பாக வீடுகளை சுத்தம் செய்ய எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இந்த மாப் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.நோய் தொற்று காலங்களில் வீடுகளை நவீன முறையில் சுத்தபடுத்துவதற்கான இந்த மாப் கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க