• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சி

July 11, 2018 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம் அணைமேடு அருகே உள்ள வெள்ளலூர் தடுப்பணையில் நொய்யல் ஆற்றில் நூரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கு மலைத்தொடர்ச்சியில் கனமழை பெய்து வருவதால் சிறுவாணி அணை நேற்று நிறைந்து அணையிலிருந்து தண்ணீர் வெளியேறியது.இதனையடுத்து அனைத்து சிற்றார்களிலும் இருந்து வந்த மழை நீரால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை பேரூரை அடுத்து நொய்யல் ஆறு புட்டு வீக்கி அருகே வரும்போது அங்கு செயல்படும் பல சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக அங்குள்ள ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்று நீர் மாசுபட்டு அதிக நூரையுடன் தற்போது ஆத்துப்பாலம் அணைமேடு அருகே உள்ள வெள்ளலூர் தடுப்பு அணையில் சோப்பு நூரையோடு சீறிப்பாய்கிறது.

காற்றில் மிதக்கும் சோப்பு நுரையால்,அப்பகுதி முழுவதும் ஆஸ்துமா,சொரியாஸிஸ் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.சலவைக்கு பயன்படுத்தும் பிளிச்சிங் பவுடர் மற்றும் செல்வபுரம் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகளால் தான் ஆற்று நீர் மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இப்பகுதியிலுள்ள சாயப்பட்டறைகள் மற்றும் சலவை ஆலைகளை மூட வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்தும்,இதுவரை ஒரிருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சில நிறுவனங்கள் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பலர் தொடர்ந்து சாய பட்டறைகளையும், சலவை ஆலைகளையும் நடத்தி வருகின்றனர்.மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்துடைப்பாக மட்டுமே சோதனை நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க