• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேஷனல் அகாடமி, செமஸ்டர் அவுட்ரீச் என்ற புதிய திட்டங்கள் துவக்கவுள்ளோம் – யு.ஜி.சி.குழுவின் துணை தலைவர்

January 22, 2020

நேஷனல் அகாடமி, செமஸ்டர் அவுட்ரீச் என புதிய திட்டங்கள் துவக்க உள்ளதாகவும் இது கல்வி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என யு.ஜி.சி.குழுவின் துணை தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிருக்கான உயர் கல்வி நிறுவனத்தின் சார்பாக மனையியல் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான போக்குகள், ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் மாநாடு துவங்கியது. இதற்கான துவக்க விழா அவினாசிலிங்கம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பல்கலைகழகங்கள் மானிய குழுவின் துணை தலைவர் பூஷன் பட்வர்தன் மற்றும் தமிழக அரசின் உயர் கல்வு துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தனர்.

விழாவை தொடர்ந்து யு.ஜி.சி.துணை தலைவர் பூஷன் பட்வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

யுஜிசி அமைப்பின் நோக்கம் தரமான கல்வியைத் தருவது.அதற்கேற்றவாறு சில திட்டங்கள் உள்ளது. கல்வியை மாணவர்களுக்கு எளிதாக கொண்டுபோய் சேர்க்கும் வகையில் ஆன்-லைன் மூலம் கற்கும் கல்விக்கும் நாங்கள் ஊக்கம் தருகிறோம். இதற்கென நேஷனல் அகாடமி என்ற திட்டம் உருவாக்கப்பட உள்ளது. அதேபோல செமஸ்டர் அவுட்ரீச் என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும் இந்த மாற்றங்களை கொண்டு வருவதில் பெரும் சவால்கள் உள்ளதாக கூறிய அவர்,இதற்கென தனி குழு அமைக்க கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, ஆய்வுரைகள் கருத்தாக்கங்கள் மற்றும் விரிவுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் படிக்க