• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

November 1, 2021 தண்டோரா குழு

நேரு நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் நடைபெற்றது. இதில்,கொரோனா பேரிடர் காலத்தில் சேவை செய்த சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

200 க்கும் மேற்பட்ட நாடுகளில் நூறு ஆண்டுகளை கடந்து சமூக பணி ஆற்றுவதில் அரிமா சங்கங்கள் தனி இடத்தை பிடித்துள்ளன.இந்நிலையில் கோவை அரிமா மாவட்டம் 324 C ன் நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு,சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்குவது, மற்றும் புதிய சங்கங்கள் துவக்கம் என முப்பெரும் விழா ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.

முன்னாள் தலைவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட ஆளுநர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தூக்கிவைத்து சிறப்புரையாற்றினார்
நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக செந்தில் குமார், செயலாளர் முகம்மது செமீக், பொருளாளராக ஹரீஷ் பாஸ்கர் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

முன்னதாக சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து புதிய உறுப்பினர்களுக்கு அரிமா சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி முன்னால் ஆளுநர் காளிசாமி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கோவை ராயல் அரிமா சங்கம் மற்றும் காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்கம் என இரு புதிய சங்கங்களின் நிர்வாகிகளாக முறையே சுரேஷ் குமார், விஜயராகவன் துரை, கார்த்திக், மற்றும் திவாகர், குணசேகரன், மதன்குமார், சம்பத்குமார், ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் அனைவரிடமும் மாநில ஜி.எல்.டி.ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் உறுதிமொழியை ஏற்று பதவியில் அமர்த்தினார்.பின்னர் கல்வி நிதியாக ரூபாய் 25000 உட்பட 5 லட்சம் மதிப்பிலான சேவை திட்டங்களுக்கான காசோலையை நேரு நகர் அரிமா சங்க தலைவர் செந்தில்குமார் முதல் துணை ஆளுநர் ராம்குமார் மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் ஜெயசேகரன்,ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் ஆகியோர் வழங்கினார்.

விழாவில் கொரானா காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ் மருத்துவத் துறையினர் டாக்டர் ராமர்,டாக்டர் பிரசன்ன மணிகண்டன் உட்பட மீடியா துறையினர் மற்றும் லயன் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என 105 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் டாக்டர் பழனிச்சாமி சண்முகம் ஆறுமுகம் மணி மற்றும் மாவட்ட அமைச்சரவைச் செயலாளர் சூரி நந்தகோபால் உதயகுமார் கோபாலகிருஷ்ணன் பிரகாஷ் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியம் ஜி ஏ டி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமாரி மாணிக்கம் மண்டலத் தலைவர் சண்முகம் வட்டாரத் தலைவர் கனகராஜ் உணவுத் திட்ட மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி கண் ஒளி மாவட்டத்தலைவர் செல்வராஜ் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாவட்டத்தலைவர் ராஜ்மோகன் சுற்றுப்புறச்சூழல் மாவட்டத் தலைவர் தனசேகர் முன்னாள் தலைவர் ஜெகதீசன் காளியப்பன் சுகுமார் சின்ராஜ் லோகநாதன்
சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் முத்துக்குமாரசாமி
அஸ்வின் பாலாஜி சம்பத்குமார் மோகன்ராஜ் கிருஷ்ணமூர்த்தி ரங்கராஜ் வெங்கடேஷ் துரைசாமி சௌந்தர்ராஜ் பால்ராஜ் சூரியபிரகாஷ் செல்வராஜ் ஜெகநாதன் கார்த்திக் உட்பட அரிமா சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க