• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு கல்வி நிறுவனங்களைப் பற்றி பரவும் தவறான செய்தி – நிர்வாகம் விளக்கம் !

December 12, 2021 தண்டோரா குழு

நேரு கல்வி நிறுவனங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும், தனியார் ஊடகங்களிலும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக நேரு கல்வி குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நேரு கல்வி நிறுவனங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும், தனியார் ஊடகங்களிலும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் இந்திய முப்படை தளபதி மரணத்தின் நிகழ்வில் எங்கள் மாணவர்களை தவறாக சித்தரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.

கல்லூரியில் முதலாம் ஆண்டு புது மாணவர்களுக்காக கல்லூரி விடுதியில் மாணவர்களால் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இது இந்த துக்க நிகழ்வுக்கு முன்பே நடத்தப்பட்டு விட்டது.இதை தவறாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் எங்களது மாணவர்களின் நாட்டுப்பற்றையும், இந்திய முப்படை தளபதியின் மரணத்தையும் சம்பந்தப்படுத்தி விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள் இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும்,மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

எங்களின் கல்லூரியின் நிறுவனர் ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவார். மேலும் எங்கள் கல்லூரியில் பேராசிரியர்கள் அதிகாரிகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் இந்திய ராணுவம் விமானப்படை அல்லது கப்பற்படையில் பணிபுரிந்தவர்கள்.

எங்கள் கல்லூரியில் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நமது இந்திய முப்படை தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் மற்றும் மௌன அஞ்சலி செலுத்தினோம்.
இந்தியனாக நிற்போம், ஆகவே தவறாக செய்தி எங்களையும் எங்கள் மாணவர்களையும் மற்ற கல்லூரி மாணவர்களையும் மனதளவில் காயப்படுத்தியுள்ளது. இத்தவறான செய்தியை பரப்புபவர்களின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை காவல்துறை உதவியுடன் எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க