நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கல்விமான்களின் சந்திப்பு நடைபெற்றது. இருபது கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.அனிருதன் வரவேற்புரை நல்கினார்.நேரு கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி செயலர் முனைவர் P.K கிருஷ்ணகுமார் கல்விமான்களின் சந்திப்பிற்கு வாழ்த்துரை வழங்க இனிதே தொடங்கியது.கல்லூரி முதல்வர்கள் ஒருவரை ஒருவர் சந்திந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த , நவீன வளர்ச்சிக்கான வழி முறைகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. தலைமைப் பண்பு என்பது பொறுப்புகளை தான் மட்டும் சுமப்பதல்ல மற்றவர்களுக்கு பகிர்வதோடு , அவர்களை தலைவர்களாக உருவாக்குகின்ற அரிய முயற்சியாகும். அவ்வகையில் சிறந்த குடிமகன்களாக புரிந்துணர்வு மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த சந்திப்பு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர்கள் கல்லூரிகளின் வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தில் உறுதி கையொப்பமிட்டனர். சாரதா கங்காதரன் கல்லூரியின் முதல்வர் முனைவர் K. உதயசூரியன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் பள்ளி மற்றும் சமூக பணியில் துறை புலமுதன்மையர் முனைவர் மோ.கனகரத்தினம் நன்றியுரை வழங்கினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது