• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை தேவை : இந்து மக்கள் கட்சியின் துணை தலைவர் பேட்டி

January 2, 2020

நெல்லை கண்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் துணைத்தலைவர் பிரசன்ன சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை கோனியம்மன் கோவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது

நமது சமுதாயத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் சூழலில் சிலர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.நெல்லைக்கண்ணனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக மாற்று மதத்தினரை தூண்டும் வகையில் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் நல்ல சட்டமாக உள்ளது. இந்துக் கடவுள்களை மட்டும் அவர்கள் போன்ற சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அவதூறாக பேசி வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கண்ணன் மாநில அமைப்புச் செயலாளர் கணபதி ரவி மருத்துவர் அணி தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க