• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

August 13, 2019 தண்டோரா குழு

மத்திய அரசின் தேசிய நிறைவுத் தேர்வு என்றழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீமோக்காகல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இராசமணி, மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சி முன்னதாக உடல் உறுப்பு தானம் குறித்தான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 700க்கும் மேற்பட்ட செவிலியர் பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஊத நிற பலூன்களை பறக்கவிட்டு பேரணியை தொடங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,

கோவை அரசு மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் குறுகிய காலத்தில் 2750 அஞ்சியோகிராம் மற்றும் 150 ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை கிலோவிற்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கோவையில் துவங்கியுள்ளோம். ஒரு தடுப்பூசி 4 ஆயிரம் ரூபாய். 4 தடுப்பூசிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் ஆகும். அது முற்றிலும் இலவசமாக போடப்படும். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் பல்வேறு சரத்துகளை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது இலவச அமரர் ஊர்தி திட்டத்தை தனியாருக்கு வழங்க வாய்ப்பில்லை. தமிழத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றார்.

மேலும் படிக்க