July 21, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால்,நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.இதனால் கர்நாடகா,கேரளா,கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.அதைபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால்,நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 8 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை,சின்னக்கல்லாரில் தலா 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 2 செ.மீ.,மற்றும் நடுவட்டம் பகுதியில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.