கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறமுள்ள இரண்டாவது வீதியில் பேக்கரி முன்பாக கோவை கொண்டையம் பாளையம், லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25), கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பந்தயசாலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செயது புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இவ்வடிக்கில் சம்மந்தப்பட்ட 13 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சூர்யா (23), மீன்கடை கார்த்திக் (23), டேனியல் (23), ஆகியோரின் மீது கோவை மாநகர காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்ரம் (21), சிவிக்சன் பெர்னார்ட் (எ) சின்னு (23), விஷ்ணு பிரகாஷ் (எ) விக்கி (24), பரணி சவுந்தர் (20), ஹரிஹரன் (எ) கெளதம் (24), அருண்குமார் (21) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு ஆவணங்கள் கோவை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்