January 30, 2018
தண்டோரா குழு
நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பள உயர்வு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாகவும் சம்பள உயர்வு இருக்கும்.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய உயர்வு 2016 ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.