• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள் கேள்வி

July 2, 2018 தண்டோரா குழு

நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? என சி.பி.எஸ்.இ.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்வில் வினாத்தாள்களை தமிழில் மொழி பெயர்த்ததில் குளறுபடிகள் அதிகம் இருந்ததால் தமிழ் வழி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கு விசாரனை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் – ஏ.எம்.பஷீர் அகமது முன்பாக வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்,நீட் தேர்வு வினாக்கள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழியில் மாற்றம் செய்யும் பொழுது எந்த பாடத்தொகுப்பிலிருந்து எடுக்கப்படுகிறது.வினாக்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தபடுகிறது.இந்த தகவல்கள் தமிழ் வழியில் மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா?தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ் ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது,புரிந்து கொள்வது போன்றவை கற்று கொடுக்க படுகிறதா என நான்கு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் 4 கேள்விகளுக்கு CBSE பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரனையை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க