• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வை கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

September 15, 2020 தண்டோரா குழு

நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக கடந்த ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நீட் தேர்வினால் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும், கொரோனா காரணமாக நீட் தேர்வை இந்த முறையாவது ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் கண்டன குரல்கள் ஒழித்து வந்தது.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தாலே இத்தனை மாணவர்களின் உயிர்கள் பறிபோய் உள்ளன.இந்த தற்கொலைகள் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய கொலைகள் எனவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும்,மாணவர் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று 20க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக இளைஞர் சங்க புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க