• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நீட்’ தேர்வு ரத்து குறித்து பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்-பள்ளிக்கல்வி அமைச்சர்

March 2, 2017 தண்டோரா குழு

‘நீட்’ தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வு பிரச்சினை என்பது இந்தியா அளவிலான பிரச்சினை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது;

“தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 12௦௦ ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரமாக்குவது தொடர்பாக அரசின் நிதிநிலைக்கு ஏற்ப தமிழக முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கனவே சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் மோடிதான் முடிவு செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வு என்பது இந்தியா அளவிலான பிரச்சினை. ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் மத்திய அரசை எதிர்த்துதான். தமிழக அரசை எதிர்த்து இல்லை”
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

மேலும் படிக்க