• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் அது குறித்த பயத்தை விட வேண்டும் -மாணவி ஹரிணி

September 20, 2022 தண்டோரா குழு

கோவை சுகுணா பிப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு முக்கிய தகுதியாக நீட் தேர்வு உள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதற்கான ரிசல்ட் கடந்த 7-ம் தேதி, இரவு வெளியிடபட்டது.அதில் 720 மதிப்பெண்களுக்கு, 702 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் இரண்டாவது இடத்தை, கோவை காளப்பட்டி சுகுணா பிப் பள்ளியில் படித்த மாணவி ஹரிணி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இவர் தமிழகத்தில் நீட் தேர்வில், முதலிடம் பிடித்த பெண் மாணவி என்ற பெருமையையும் பள்ளிக்கு சேர்த்துள்ளார். கோயம்புத்தூர் காளப்பட்டியில் உள்ள சுகுணா பிப் பள்ளி மாணவி ஹரிணி மாநில அளவில் நீட் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தார். இவரை பாராட்டும் விதமாக சுகுணா பிப் பள்ளி சார்பில் இன்று பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சுகுணா பிப் பள்ளியின் முதல்வர் பூவண்னண் வரவேற்றார். சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

சுகுணா கல்வி குழுமம் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சிறந்த முறையில் கல்வி பயிற்றுவித்து வருகின்றது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் அவர்களை உற்சாகப்படுத்தி மாநில மற்றும் தேசிய அளிவில் சாதனை புரிய உதவி வருகின்றது. அவர்களுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள், மைதானங்களை சர்வதேச அளவில் அமைத்து தந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சுகுணா கல்வி குழுமங்களின் தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி மாணவியை வாழ்த்தி பேசியதாவது :-

ஹரிணியைப் பொறுத்த வரை கடுமையான உழைப்பாளி. தொடக்கம் முதல் தொடர்ந்து எங்களது மூன்று பள்ளிகளிலும் படித்தவர். பள்ளி வருகையில் ஒரு நாளும் தவறியதில்லை. பாடத்திட்டத்துக்கு அப்பாலும் ஆர்வமாகப் படிக்கும் சுறுசுறுப்பான மாணவி. ஹரிணியின் விருப்பம் போலவும், அவரது பெற்றோர் மருத்துவர்கள் இருவரின் விருப்பம் போலவும் இவர் மேற்படிப்பை மருத்துவத்தில் தொடரவிருக்கிறார். மருத்துவப் படிப்பிலும் சாதனை புரிய வாழ்த்துகிறேன். தமிழக அளவில் நீட் தேர்வில் மாணவிகள் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற பெருமைக்கும் உடையவர். இவர் மருத்துவராகி, இந்தியாவில் சேவை புரியவேண்டும். இவர் சாதனைக்கு பின்புலமாக இருந்து ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவி ஹரிணி பேசும் போது :-

எனது லட்சிய கனவான மருத்துவ படிப்பிற்கு உண்டான நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து எனது முன்னேற்றத்திற்கு உதவிய எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள் சுகுணா பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது தாய் தந்தையர், மருத்துவர்கள், அவர்கள் சமூகத்திற்கு செய்து வரும் மருத்துவ சேவையை பார்த்து தானும் இந்த துறையை தேர்வு செய்து சேவையாற்ற விரும்பினேன். அவர்களின் வழியில் நானும் மருத்துவம் படிக்க என்னை சிறு வயதில் இருந்தே தயார் செய்து வந்தேன். இதனால் எனக்கு நீட் தேர்வு பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் அது குறித்த பயத்தை விட வேண்டும்.

மேலும் அடுத்த கட்டமாக, டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் படிக்க விரும்புகின்றேன். அங்கு, என்னுடைய எதிர்பார்ப்புகளை எய்ம்ஸ் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும் படிக்க