• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவியை நேரில் பாராட்டிய அமைச்சர்

November 5, 2021 தண்டோரா குழு

நீட் தேர்வில் வெற்றி பெற்ற
பழங்குடியின மாணவியை நேரில் சந்தித்து ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார் .

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் ரொட்டிக்கவுண்டனூர் ஊராட்சி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணவி சங்கவி. இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப்படிப்பு பெற தகுதி பெற்றார்.

இதனை அடுத்து ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாணவியின் குடியிருப்பிற்கே நேரில் சென்று வாழ்த்தினார். அத்துடன் மடிக்கணினியையும் பரிசாக வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த பழங்குடி மாணவி படித்து டாக்டராக வேண்டும் என முயற்சி செய்து வெற்றி பெற்று தான் சார்ந்த பகுதிக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவரை ஊக்கப்படுத்தவும், பிற பழங்குடி மாணவ, மாணவிகளுக்கு இவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன்.மேலும் மாணவி சங்கவியின் கல்விக்கு, துறை சார்ந்தும் தனிப்பட்ட முறையிலும் தேவையான உதவிகள் செய்யப்படும்.

அவர் படிப்புக்கு உதவும் என்பதால் உடனடியாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களைக்காட்டிலும், பழங்குடி மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு கல்வி கொடுத்தாலே அவர்களுக்கு தேவையானதை அவர்களால் பெற முடியும். இந்த குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து ஆட்சியர் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் பழங்குடி மாணவர்களுக்கு எளிதில் சாதி சான்றிதழ் கிடைக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் சமீரன், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, ஆதிதிராவிடர் நல அலுவலர் வசந்தராம்குமார், மதுக்கரை வட்டாட்சியர் பர்சானா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க