• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா தேசிய அளவில் முதலிடம்

June 4, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையல் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது.கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.படிப்பிற்கு மட்டும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு சித்தா,யுனானி உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு எழுத வேண்டியிருந்ததால் அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதினர்.இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர்.அவர்களில் 12,69,922 பேர் தேர்வு எழுதினர்.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.ஆனால்,சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாக, 12:30 மணியளவில் வெளியாகின. நீட் தேர்வு முடிவில் தேர்வு எழுதியவர்களில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில், 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர்,இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதைபோல்,தெலுங்கானா மாணவர் ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஹிமான்ஷூ சர்மா 690 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஆரோஷ் தமிஜா 686 மதிப்பெண் பெற்று 4வது இடத்தையும், ராஜஸ்தான் மாணவர் பிரின்ஸ் சவுத்திரி 686 மதிப்பெண் பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 இடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் 1, 14,602 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். இவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க