June 7, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு தோல்வியால் தமிழகத்தில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் தமிழகத்தில்,தேர்வெழுதிய 1.2 லட்சம் மாணவர்களில் 45336 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில்,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் திருச்சி மாவட்டம் உத்தமர்கோவிலை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் செஞ்சி அருகே உள்ள வெள்ளூந்தூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மாணவியும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.