June 22, 2018
தண்டோரா குழு
நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்செய்தியாளர்களிடம் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும் இனி வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும்.திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லட்சம் வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.