December 31, 2024
தண்டோரா குழு
கோவை ஆதியோகியில் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. சத்குருவின் முன்னிலையில் நடைபெற்ற இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சத்குரு அவர்கள் பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் அடுத்த 24 மாதங்களில் 3 பில்லியன் மக்கள், குறைந்தபடசம் 7 நிமிடங்களாவது தியானத்தில் ஈடுபட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம் இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும்.” எனக் கூறினார்.