• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிழல் குடையை ஆக்கிரமித்த குடிமகன்கள் – தவிக்கும் பயணிகள்

March 3, 2020

கோவை அரசு மருத்துவமனை முன் நிழல் குடையை குடிமகன்கள் ஆக்கிரமித்து உள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவையில் உள்ள பிரதான சாலையான திருச்சி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது.
இதன் முன்பு பேருந்து நிறுத்தம் உள்ளது பேருந்து நிறுத்தத்தை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்பட நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் ரயில் நிலையம், உக்கடம், உட்பட மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்க கோவை மாநகராட்சி சார்பில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது.இதில் சமீப காலமாக கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடமாக மாறியுள்ளது.

மேலும் பயணிகளுக்காக போடப்பட்டுள்ள இருக்கையில் குடி மகன்களும் பிச்சைக்காரர்களும் ஆக்கிரமித்து உள்ளதால் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும் அமைந்துள்ள பகுதியில் மது அருந்தி, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க