February 28, 2018
தண்டோரா குழு
2019 ம் ஆண்டிற்குள் முதல் முறையாக நிலாவில் 4ஜி இன்டர்நெட் சேவையை வழங்க வோடபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு நிலாவில் 4ஜி இணைய சேவை வழங்க வோடஃபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்டோ ஊர்தி ஈடுபட்டு வருகின்றது.இந்த ஊர்தியின் உதவியுடன் நிலாவின் இருந்து தகவல்கள், HD வீடியோவை உலகத்திற்கு பகிர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு இணைய சேவை வழங்கி வரும் வோடோஃபோன் நிறுவனம் நெட்வொர்க் சேவையை வழங்குவதாக கூறியுள்ளது. வோடபோன் ஜெர்மனி, நோக்கியா, ஆடி கார் நிறுவனம் இணைந்து இதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளன.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கானவெரல் ((Cape Canaveral )) பகுதியில் இருந்து இந்த சேவைக்கான ஃபால்கான் 9 மூலம் நிலவுக்கு செல்ல உள்ளது.மொபைல் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.