• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலவில் நான்காவதாக காலடி வைத்த ஆலன் பீன் காலமானார்

May 28, 2018 தண்டோரா குழு

நிலவில் நான்காவதாக காலடி வைத்த முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரர் ஆலப் பீன் காலமானார்.

அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலப் பீன்(86). கடந்த சில வருடங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

கப்பற்படை கேப்டனாக தனது வாழ்க்கையை துவங்கிய ஆலன் பீன் ஒரு மிகச்சிறந்த ஓவியர். கடந்த 1969ல் பீன் நிலவுக்குச் சென்றார். நிலவில் காலடி பதித்த நான்காவது நபர் என்ற பெருமை ஆலன் பீன் உண்டு.

இவரது மரணம் தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர் பொறியாளர், வின் வெளி வீரர், ஓவியர் என பன்முகம் கொண்டவர் இவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க