• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிலத்தை மீட்டு தருமாறு ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஐஜியிடம் மனு

October 3, 2022 தண்டோரா குழு

கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகோத்தமன்.தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு
கோவையை அடுத்த நல்லட்டிபாளையம் பகுதியில் தமக்கு சொந்தமான சுமார் ஆறு கோடி மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலத்தை சிலர் உள்ளூர் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து அபகரித்து உள்ளதாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலத்தை பிரித்து விற்பனை செய்ய இருபத்தி எட்டு இலட்சம் ரூபாய் தாம் கடனாக பெற்றதாகவும்,இதற்கு அடமானமாக அசல் பத்திரங்களை வாங்கிய சில நாட்களிலேயே பத்திரம் வேறோருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகாவும், இது குறித்து பல முறை காவல் துறை,முதல்வர் தனி பிரிவு,உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலரிடம் இது குறித்து கூறியும் கடத்த இரண்டு வருடங்களாக தாம் அலைகழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

இந்த மனு வழங்க வந்த பாதிக்கப்பட்ட ரகோத்தமனுடன் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ் ராமநாதன்,மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க