• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை அறிவிப்பு

December 16, 2017 தண்டோரா குழு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத்தண்டனையும், 25லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. அப்போது, அந்த நிறுவனத்திற்கு சாதகமாக செய்யல்பட்டதாக கூறி
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணை முழுவதும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மதுகோடாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 25லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எச்.சி. குப்தா, அசோக்குமார் பாசு, விஜய் ஜோசி ஆகியோருக்கும் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் குற்றவாளிகள் 4பேருக்கும் 2மாதம் இடைக்காலப் பிணை வழங்கியும் நீதிபதி பரத் பராசர் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க