• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்மலா தேவி ஆடியோ விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி விசாரணை நிறைவு

May 4, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் விசாரணை நிறைவுப்பெற்றது என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழிக்கு அழைக்கும் ஆடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷன் சார்பில் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானம்,

ஏப் 19ம் தேதி முதல் நடைபெற்று வந்த விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.ஆடியோ விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.மே 15ம் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க