• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளில் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு

March 16, 2020 தண்டோரா குழு

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 4 பேரும் சட்டத்தில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் இடைவிடாது பயன்படுத்தி தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு தடை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மூன்று முறை தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவது என ஒரு சுழற்சியான போக்கை நிர்பயா கொலை குறவாளிகள் பின்பற்றி வருகின்றனர். வரும் 20-ந் தேதி நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நிர்பயா கொலை குற்றவாளிகள் அக்‌ஷய், பவண் மற்றும் வினய் ஆகியோர் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 20-ந் தேதியும் இவர்களது தூக்கு தண்டனை நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் படிக்க