• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

February 17, 2020 தண்டோரா குழு

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.அதில் ஒருவன்,சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான்.முக்கிய குற்றவாளி ராம்சிங்,திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். முகேஷ், பவன்குமார், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது.
இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை தொடர்ந்து நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக மரண தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை வெளியிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 முறை மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட் நிலையில், 3-வது முறையாக மீண்டும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க