September 25, 2025 
தண்டோரா குழு
                                உரிய காலத்திற்கு முன்னரே சருமம் வயதான தோற்றத்தைப் பெறுதல் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் முதல் சீரற்ற சரும நிறம் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சினைகள் வரையிலான சருமப் பிரச்சினைகளால் இந்தியர்கள் சிரமப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில்  ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவும் முன்னணி நிறுவனமான ஆம்வே இந்தியா கண்ணுக்குப் புலப்படக்கூடிய சருமம் வயதாகும் ஆரம்ப மற்றும் அதிகரிக்கும் அறிகுறிகளை இலக்காகக் கொண்ட அடுத்த தலைமுறை சருமப் பராமரிப்பு தயாரிப்புகளான ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் டிஃபையிங் சீரம் மற்றும் ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் கரக்டிங் சீரம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இந்த சீரம்கள், தோலில் முதுமையின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் காரணிகளை குறைக்கின்றன. இந்தப் புதிய சீரம்கள், ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷனின் ஹைட்ரேட்டிங், பேலன்சிங் மற்றும் ரினியூயிங் & ஃபர்மிங் வரிசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு வயதில் மாறும் ஸ்கின் கேர் தேவைகளை கருத்தில் கொண்டு சிறப்பாக தயாரிக்கப்பட்டவையாகும். 
“நியூட்ரிலைட் நிறுவனத்தின் 90 ஆண்டுகால மூலிகை நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சீரம்கள், நியூட்ரிலைட் பண்ணையில் வளர்க்கப்பட்ட இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டவையாகும். இவை தோலுக்கு இறுக்கம், மென்மை மற்றும் வலிமையை வழங்குகின்றன, மேலும் இயற்கை மற்றும் அறிவியலின் சக்தியை இணைத்து தோலுக்கு இளமை நிறைந்த தோற்றத்தை அளிக்கின்றன. ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் டிஃபைங் சீரம், தோலில் முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை குறைக்க உதவுகிறது, அதேவேளையில் ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் கரெக்டிங் சீரம் ஆழமான சுருக்கங்கள், தளர்ந்த தோல் மற்றும் மேம்பட்ட ஸ்கின் ஏஜிங் அறிகுறிகளைச் சரிசெய்ய உதவுகிறது.
”வெளியீட்டு நிகழ்வில் ஆம்வே இந்தியாவின் மேலாண்மை இயக்குநர். ரஜ்னீஷ் சோப்ரா கூறியதாவது:
 “இந்திய ஸ்கின் கேர் சந்தை விரைவாக வளர்ந்து வருகிறது, இதற்கான முக்கிய காரணம் நுகர்வோரின் அதிகரித்துள்ள விழிப்புணர்வு, அதிகரித்து வரும் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன், மேலும் பிரீமியம் மற்றும் இயற்கையான தயாரிப்புகளின் தேவை ஆகியவையாகும். இந்நாட்களில் அதிகமான மக்கள் சரும ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில், 70% நகர்ப்புற நுகர்வோர், இப்போது அவர்கள் ஸ்கின் கேர் நன்மைகள் குறித்து முந்தையதை விட அதிகமாக விழிப்புணர்வுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
இந்த மாற்றம், மக்கள் இப்போது சிந்தித்து, விழிப்புணர்வுடன் ஸ்கின் கேர் தயாரிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஓர் அறிக்கையின்படி, சுமார் 71% இந்திய நுகர்வோர் தாவரங்களில் இருந்து பெறப்பட்ட இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஸ்கின் கேர் தயாரிப்புகளை விரும்புகின்றனர். ஆம்வே இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆழமான ஆராய்ச்சி மற்றும் முடிவுகளின் மூலம், நுகர்வோரின் மாறும் விருப்பங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால் புதியதும் பயனுள்ளதுமான தயாரிப்புகளை உருவாக்க எங்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது. 
ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் டிஃபையிங் மற்றும் கரெக்டிங் சீரம்களின் வெளியீடு, அறிவியல் மற்றும் இயற்கையின் இணைப்பின் மூலம் பயனுள்ள ஸ்கின் கேர் தயாரிப்புகளை வழங்குவோம் என்ற எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது. நவீன இந்திய நுகர்வோரின் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாங்கள் தயாரிப்பு புத்தாக்கத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.”ஆம்வே இந்தியாவின் சீஃப் மார்க்கெட்டிங் ஆபிசர் அம்ரிதா அஸ்ரானியின் கூற்றுப்படி, ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் இது எங்களின் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் வரிசையாகும், இது நியூட்ரிலைட்டின் 90 ஆண்டுகால மூலிகை நிபுணத்துவத்தையும், ஆர்டிஸ்ட்ரியின் 60 ஆண்டுகால அதிநவீன ஸ்கின் சயின்ஸையும் இணைக்கிறது.” 
குறிப்பாகத் தோலின் அவசியமான ‘ரீபில்ட்’ சத்துத் தேவையை பூர்த்தி செய்யவும், தோலின் முழுமையான அழகை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 16 தாவர சாறுகள் மற்றும் மேம்பட்ட ஸ்கின் கேர் சயின்ஸின் மூலம் உருவாக்கப்பட்ட எங்கள் டிஃபையிங் மற்றும் கரெக்டிங் சீரம்கள், வழிகாட்டுதலின்படி பயன்படுத்தப்படும் போது சருமத்தில் சிறந்த விளைவுகளை வழங்குகின்றன – இதன் மூலம் சருமம் இன்னும் இளமையாக, இறுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் தெரிகிறது.