• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக தொண்டர் ரவி உயிரிழப்பு

April 2, 2018 தண்டோரா குழு

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த  மதிமுக தொண்டர் ரவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் மார்ச் 31ம் தேதி நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்து மேடையை நோக்கி ஓடி வந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க