May 22, 2018
தண்டோரா குழு
நிபா வைரஸ் வவ்வால்களின் சிறுநீரிலும்,எச்சம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது என்பதால், கோவையில் உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் ஏராளமான வவ்வால்கள் உள்ளதால் மாநகராட்சியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் நோய் தாக்குதலின் காரணமாக சிலர் உயிரிழந்து உள்ள சூழலில்,கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,நிபா வைரஸ் வவ்வால்களின் சிறுநீரிலும்,எச்சம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இதன் மூலம் காய்ச்சல்,கடுமையான தலைவலி,மயக்கம்,மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளை காய்ச்சலாக மாறி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.எனவே இதற்கு மூலக் காரணமாக இருக்கும் வவ்வால்கள்,கோவையில் உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் ஏராளமாக உள்ளது என்பதால் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்க முடியும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மேலும்,தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பூங்காவில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளது. எனவே உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.