April 9, 2021
தண்டோரா குழு
கோவையில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், வரும் 12ம் தேதி ‘நிதி ஆப்கே நிகட்’ என்கிற பெயரில் ஏப்ரல் மாத குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள, மண்டல ஈ.பி.எப்., அலுவலகம், இணையவழியில் இம்முகாமை நடத்த உள்ளது. இக்கூட்டம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடக்கிறது. பி.எப்., சந்தாதாரர்களுக்கு, காலை, 11:00 முதல், 12:00 மணி வரையிலும், தொழில்நிறுவன உரிமையாளர்களுக்கு, மதியம், 12:00 முதல், 1:00 மணி வரையிலும், ஓய்வூதியதாரர்களுக்கு மதியம் 2.30 முதல் 3.30 வரையிலும் இணைய வழியில் நடக்கும்.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 9ம் தேதிக்குள் இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த தகவலை, கோவை மண்டல பி.எப்., கமிஷனர் ஜெய்வாடன் இங்லே வெளியிட்டுள்ளார்.