March 12, 2018
தண்டோரா குழு
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் 40க்கும் அதிகமான மாணவிகள் சிக்கியதால் மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை அறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் நேற்று முதல் மீட்பு பணிகளை துரிதமாக கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் மீட்புபணிகளை கண்காணித்து வரும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் மரியம் பல்லவி பல்தேவ் தான் உண்மையான ‘அறம்’ மதிவதனி என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியுள்ளார்.