• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை முதல் விஜயகாந்த் பிரச்சாரம்

April 8, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன் வருடாந்திர மருத்து பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் சில நாட்கள் அங்கேயே தங்கி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவர் மருத்துவமனையிலேயே தங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

அவர் நலமுடன் இருப்பதாகக் மருத்துவர்கள் கூறியதையடுத்து வீடு திரும்பினார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஜயகாந்த் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தே.மு.தி.க.,வின் இந்த அறிவிப்பு அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியளித்துள்ளது.

மேலும் படிக்க