• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

April 1, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 71 லட்சம் குழந்தைகளுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. ஏப்ரல் 30-ம் தேதி 2-ம் கட்டமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பள்ளி, பேருந்து நிலையங்கள்,அங்கன்வாடி மையம், சுகாதார மையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க