• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை மறுதினம் பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

February 27, 2019 தண்டோரா குழு

பள்ளிகல்வி துறை அமைச்சர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றார்கள்.அப்போது கட்டமைப்பு இல்லை என வேறு மாநிலங்களில் தேர்வு எழுத வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு ஒன்றரை லட்சம் மாணவர்கள் வந்தாலும் தேர்வெழுத வைக்கும் கட்டமைப்பு உள்ளது என்ற கடிதம் மத்திய நீட் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம். அவர்களுக்கு வாழ்த்துக்கள். தற்போது தமிழகம் முழுவதும் 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஆயிரம் மருத்துவர்களை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வருகிற மார்ச் 29 வரை பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அதற்கு பிறகே வர உள்ளதால் ஆசிரியர்களை தேர்தல் பணியில் நியமானம் செய்வது குறித்து பல முடிவுகளை அரசு எடுக்க இருகிறது.

முதல்வர் இந்த ஆண்டு 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு 15 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8,9,10 ம் வகுப்பு மாணவர்கள் 1லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அது கிடைக்கும். ஐசிடி என்ற புதிய திட்டம் ஆராயிரம் பள்ளிகளில் முதல்வர் துவங்க உள்ளார். அதன் மூலம் ஆறாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஆண்டுதோறும் இருப்பதை காட்டிலும் இரண்டு லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிகமாக சேர்க்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க