கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்க உள்ளனர்.
புதிய கவுன்சிலர்களை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மாமன்ற அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.அங்கு கவுன்சிலர்கள் அமரும் இருக்கை,மேஜைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு போடப்பட்டுள்ளது.மாநகராட்சி வளாகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.6 வருடங்களாக பயன் படுத்தபடாமல் இருந்ததால் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன.அவை அகற்றப்பட்டு புது ஓடுகள் போடப்பட்டு வருகிறது.
மேயர் அமரக் கூடிய இருக்கை,மேஜைகளும் போடப்பட்டுள்ளது.மேயர் பேசுவதை கேட்கும் வண்ணம் அரங்கம் முழுவதும் ஸ்பீக்கர்களும் வைக்கப்பட்டு உள்ளது.தற்போது மாநகராட்சியில் 60-க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்கள் உள்ளதால் விக்டோரியா ஹால் பகுதியில் உள்ள கழிவறைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆட்சியில் 72வார்டாக இருந்தது தற்போது 100வார்டாக அமைந்துள்ளது.இதற்கு ஏற்றவாறு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு