• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறை ரத்து – தமிழக அரசு

June 14, 2018 தண்டோரா குழு

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், பிறை தெரிந்தவுடன் ரமலான் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும். முன்னதாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஜூன் 16ம் தேதி ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இன்று பிறை தென்பட்டால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என கூறப்பட்டது.

இதற்கிடையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு இன்று மாலை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாப்படுகிறது என்று தமிழக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறை ரத்தானதால் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க