December 22, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு விவசாய சங்கம் கோவை மாவட்ட குழுவின் சார்பாக நாராயணசாமி நாயுடு நினைவு தினம் ஒரு தனியார் ஓட்டலில் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறும்போது,
நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும், தமிழகத்திலுள்ள நதிகளை இணைத்து விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும், தென்னை நார் தொழில் களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை மனுவாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.