• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு

February 12, 2020

நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு பாரத் சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலகம் முழுவதிலும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வருட காதலர் தினத்திற்கு எதிராக பாரத் சேனா அமைப்பின் சார்பாக பாப்பநாயக்கன்பாளையம் சிக்னல் அருகே ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் அல்சேஷன் நாய்க்கும் தாலி காட்டி திருமணம் நடத்த முயற்சி செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாரத் சேனாவின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ருத்ரமுத்து பேசுகையில்,

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும், பொது இடங்களில் அநாகரீகமாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும் இதனையடுத்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க