• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

January 17, 2020 தண்டோரா குழு

செல்பி மோகம் இன்றைக்கும் பலரும் வியாதி போன்றாகிவிட்டது. அதிலும் பெரும்பாலும் இளம் வயது பெண்களுக்கு தங்களுக்கென செல்லமாக வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதென்றால் அலாதி பிரியம். இது மேலைநாட்டு பெண்களிடம் அதிகம் காண இயலும். தங்களுக்கென ஒரு வளர்ப்பு பிராணிகளை வைத்து அதனுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் அப்டேட் செய்தால்
தான் அன்றைய இரவு அவர்களுக்கு தூக்கமே வரும்.

ஆனால் செல்ல பிராணிகளுடன் செல்பி எடுக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் அர்ஜென்டினாவில் நடைபெற்றுள்ளது. லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லாரா சன்சோன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,

எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா? எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க