April 6, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர், ஆனால் கிடைத்தது துணைவேந்தர் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பிறப்பித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார். கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை வேந்தர் நியமனம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்,
“கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர், ஆனால் கிடைத்தது துணைவேந்தர், மக்களுக்கும், அரசுக்கும் இடையே இருக்கும் இடைவெளி வெளிப்படையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.