முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டார்.
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில், முதல்வர் பழனிசாமி 14 நாள் பயணமாக, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கும், துபாய் நகரத்திற்கும் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இன்று துவங்கி செப்.,10 வரை அவர் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலில் லண்டன் செல்லும் முதல்வர் பழனிசாமி அங்கு சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இதனை தொடர்ந்து லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட உள்ளார். பின்னர் இந்துஜா உள்ளிட்ட தொழில் முதலீட்டாளர்களையும் அவர் சந்திக்கிறார்.
இதற்காக இன்று காலை 9:45 மணிக்கு, ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டன் புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், துறை செயலர்கள் சென்றனர்.
வெளிநாடு செல்வதற்கு முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே இந்த வெளிநாட்டு பயணம். 3 நாடுகளின் அரசுகள் அழைத்ததன் பேரில் வெளிநாடு செல்கிறேன். 3 நாட்டு அதிபர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து பேச உள்ளேன் என்றார். மேலும், ஸ்டாலின் அடிக்கடி சொந்த வேலையாக வெளிநாடு செல்கிறார். ஒரு முதல்வர் என்ற முறையில் நான் வெளிநாடு செல்வதை கொச்சைபடுத்துகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட உடன் தொழிற்சாலைகள் துவங்கப்படும். நான் ஒன்றும் தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி. முதல்வர் என்ற முறையில் நேரில் சென்று அழைத்தால் தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வருவார்கள் என்றார்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா