• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் வெற்றி பெறுவது உறுதி – 15வது அதிமுக வேட்பாளர் வனிதாமணி

February 9, 2022 தண்டோரா குழு

கடந்த இரண்டு முறை 15வது வார்டில் கவுன்சிலராக இருந்து மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் தாம் வெற்றி பெறுவது உறுதி என அதிமுக சார்பாக போட்டியிடும் வனிதாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 15-ஆவது வார்டு பகுதியில் அதிமுக சார்பாக வனிதாமணி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த வரும் இந்த பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவருமான வனிதாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் தான் பிரச்சாரம் செல்லும் இடங்களில் பொதுமக்கள் தமக்கு நல்ல வரவேற்பு அளிப்பதாகவும் கடந்த 8 மாதமாக ஆட்சி செய்த திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியாக இருப்பதால், அதிமுக சார்பாக போட்டியிடும் தான் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க