• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் முதல்வர் ஆக போவதில்லை கட்சிக்கு தலைவராக மட்டுமே இருப்பேன்- ரஜினி

March 12, 2020

நான் முதல்வர் ஆக போவதில்லை கட்சிக்கு தலைவராக மட்டுமே இருப்பேன் ரஜினி பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு விசயத்தில் திருப்தியில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம் என்று பேசியது ஊடகத்தில் பலவிதமாக வெளிவந்தது.நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அவர்களுக்கு என் நன்றி. 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருவதாக சொல்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன் என சொன்னது 2017 டிசம்பரில் மட்டுமே.

கட்சி பதவிகளை தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர்.தேர்தல் முடிந்ததும் அத்தியாவசியமான கட்சி பதவிகள் மட்டுமே இருக்கும் என்பது நிலைப்பாடு. கட்சி பதவிகளை வைத்திருப்பவர்கள் டெண்டர்களில் ஊழல் செய்கிறார்கள்.50 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும்.

60% சதவீதம் 50 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு. 30-40% அனுபவம் வாய்ந்த வல்லுநர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை செயல்படுத்துவோம்.
நான் முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. என் ரத்தத்திலேயே இல்லை.

ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை கட்சி தலைமை தூக்கி எறியும். ஆட்சியில் இருப்பவர்களை கட்சியில் இருப்பவர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.நான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்கவே இல்லை. அரசியலில் அழகு பார்ப்பது பிடிக்காத ஒன்று வேலை பார்க்க வேண்டும் என்று பேசி வருகிறார்.

மேலும் படிக்க