• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேம்பாட்டு திறன் கூட்டம்

September 20, 2022 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று, மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாணவர்களின் வளர்ச்சியை கண்டறியும் வகையில் அடுத்து என்ன? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள, சுகுணா, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று, தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ்,மற்றும் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அடுத்து என்ன? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நான் முதல்வன் எனும் திட்டமானது, ஒவ்வொரு மாணவனின் தனிதிறமைகளை வெளிகொண்டு வரும் ஒரு, நிகழ்ச்சியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும், பள்ளி, கல்லூரி களில் மாணவ, மாணவிகளிடையே நடத்தபட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் மாணவர்களின் பேச்சு திறமை, எழுத்தறிவு, ஆங்கில புலமை, போன்ற பல்வேறு தனி, தனி, திறமைகளை வெளி கொண்டு வரும் திட்டமாக செயல்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
அடுத்து என்ன என்ற, எனும் தலைப்பில் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் துவக்கவிழா நடைபெற்றது. இந்ந நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி, குத்துவிக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வங்கி துறையில், பணியாற்றி வருகின்ற, வேலுமணி செல்வம், மற்றும் கிறிஸ்டி லாவண்யா, டிஎன்பிஎஸ்சி, துறை சார்ந்த இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க