February 7, 2018
தண்டோரா குழு
தான் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன். அந்த 6 துரோகி அமைச்சர்கள் மட்டும் வெளியில் சென்றுவிட்டால் போதும். மற்ற எம்.எல்.ஏக்கள் ஆட்சியை நடத்த 3 வருடம் ஒத்துழைப்பு தருவேன் என டிடிவி தினகரன் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன்,
டிடிவி தினகரன் நல்ல கருத்தை தான் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆகும் போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் போது நான் முதலமைச்சர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது” என்று கூறினார்.